தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 februari 2012

மெல்பேர்ன் ஹோட்டல் மாடியிலிருந்து தவறி விழுந்தார் கெஹலிய ரம்புக்வெல! கால்கள் முறிந்து இரு சத்திர சிகிச்சைகள்!!



அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் “சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது.
இரு சிறிய சத்திர சிகிச்சைகள்
மெல்போனில் விழுந்து விபத்துக்குள்ளான தனக்கு இரு சிறிய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்றாம் இணைப்பு:
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விரைவில்  நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இன்று முற்பகல் தம்மை தொடர்புகொண்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மெல்பேர்ன் சென்றிருந்தார். இந்நிலையில், அமைச்சர் கெஹலிய மெல்பேர்ண் நகரிலுள்ள விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த விடுதியின் அறை பூட்டப்பட்டிருந்ததால், ‘பல்கனி‘ வழியாக ஏறிக் குதித்து உள்ளே செல்ல முற்பட்ட வேளையில், தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
இதன்காரணமாக அவரது கால்கள் முறிந்துள்ளதுடன் உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து மெல்பேர்னில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ரம்புக்வெலவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஊடகத்துறை அமைச்சின் செயலர் கணேகல உறுதிப்படுத்தியுள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten