விடுதலைப் புலிகளின் அதி முக்கிய, மற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் தற்போது உறுதிசெய்யப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட(2009) போரின்போது இவர் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தது.
ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் அடிப்படையில் கேணல் ஜெயம் அவர்கள் இறுதிவரை போராடி, இராணுவத்தினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கிட்ட நெருங்கிய வேளை தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளார் எனவும் அறியப்படுகிறது.
கேணல் ஜெயம் அவர்கள் தன்னைத் தானே சுட முன்னர் சயனைட் வில்லையையும் கடித்துள்ளார். முன்னேறிவரும் இராணுவத்திடம் எச்சந்தர்ப்பத்திலும் தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் பல ஆள ஊடுருவும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி, மட்டு மற்றும் அம்பாறைப் பகுதியில் பல தாக்குதல்களை நடத்தியவர் கேணல் ஜெயம் ஆவார். கேணல் ஜெயம் என்னும் பெயரைக் கேட்டாலே இலங்கை இராணுவம் கிலி கொள்ளும் அளவுக்கு அவர் தாக்குதல் யுக்திகள் இருந்தது. தேசிய தலைவரின் நம்பிக்கைக்குரிய போராளியாக அவர் என்றும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக குடும்பிமலைப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே நிலைகொண்டு இராணுவத்துடன் பாரிய போரைத்தொடுத்தவர் கேணல் ஜெயம் அவர்கள். இறுதியா அப்பகுதி இராணுத்திடம் வீழ்ந்தது, அவ்வேளை அவரிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டது. இருப்பினும் துப்பாக்கியில் உள்ள கத்தியால் போரிட்டு இராணுவத்தினர் பலரை எதிர்கொண்டு, அங்கிருந்து தப்பி காட்டு வழியூடாக வன்னி வந்தடைந்தார் கேணல் ஜெயம் என்பதும் குறிப்பிடத்தக்கவிடையமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten