தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 februari 2012

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு வைகோ அவர்கள் பிரேரணை ! !


ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்கவேண்டும். இதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவரு மாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான வைகோ.ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய நாடாளுமன்ற நீதிமன்றம் ஆகியவற்றின் கீழாக இந்த சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை உடன் வாபஸ் பெறவேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க அந்தப் பிரேரணையில் வலி யுறுத்தப்பட வேண்டுமெனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் ஐரோப்பிய நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையகத்தின் உப கூட்டத்தொடரிலேயே வைகோ இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.ஈழத் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கப்பெற வேண்டும் என மேற்குலகம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில், வைகோவின் இந்த நடவடிக்கையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அரசியல் ஆய் வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.அதேவேளை, சூடானிலிருந்து தென் சூடானை தனி நாடாகப் பிரிப்பதற்கு அண்மையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது தனிநாடாகப் பிரிந்துள்ளது தெரிந்ததே.

அத்துடன், இந்திய தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர் வைகோ முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கவனம் திரும்பியுள்ளதை அறியமுடிகின்றது.ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் இவ்வாறானதொரு விடயம் குறித்துப் பேசப்பட்டுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை முழுமையாகத் தமிழர்களின் பக்கம் திருப்பியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதேவேளை, ஐரோப்பிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை குறித்து இலங்கை அரசு தனது இராஜதந்திரிகளின் ஊடாக முக்கியமான தகவல்களை அறிந்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten