சூசைஎன்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார்.வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 18 ல் மரணமடைந்தார்.
சூசை 1963 ஒக்டோபர் 16ல் பிறந்தவர், இவர் வட இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகளின் முதல் தொகுதி ஆட்சேர்ப்பாளர்களில் ஒருவர். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வடமராட்சி பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவராக கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் கீழ் பணியாற்றி வந்தார்.
சூசை 1991 முதலே கடற்புலிகள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார்,முதலில் ஒரு தளபதியாகவும் பின்னர் விசேட தளபதியாகப் பொறுப்பு வகித்தார் .தொடர்பாடல்களுக்காக பயன்படுத்தப்படும் சூசையின் சங்கேதக் குறியீடு “சீ ஒஸ்கார்” என்பதாகும். சூசை படிப்படியாக கடற்புலிகள் பிரிவில் ஏறக்குறைய தனது ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டார். கடற்புலிகளை, “நான் வளர்த்த புலிகள்” என்று சொல்லிக் கொள்வதில் சூசை அதிக விருப்பமுள்ளவராக இருந்தார்.
எல்.ரீ.ரீ.ஈயின் பழைய காலத்தவர்களில் ஒருவரான சூசை, யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் வலிமைமிக்க கோபுரங்களில் ஒன்றாகத் தன்னை நிரூபித்துக் காட்டியவர்.மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கரையோர சமூகத்தவர்கள், அது ஒரு நுட்பமான தொழில் என்பதால் கடற்புலிகளுக்குள் நன்கு கலந்திருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரக் கிராமமான பொலிகண்டியிலிருந்து வந்தவரான சூசை, இந்த மக்களின் பொதுவான பாரம்பரியம் மற்றும் பச்சாத்தாபம் என்பனவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டார். அவர் சாதாரண மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததோடு, சாதாரண மக்கள் உண்மையாக விரும்பும் ஒரு சில புலித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்ஜி ராமச்சந்திரனை அழைப்பது போல மக்களிடையே பிரபலமான சூசையையும் “மக்கள் திலகம்” என்றே அழைத்தனர்.
இந்திய இராணுவத்தினரோடு போரிட்டபோது சூசை காயமடைய நேர்ந்தது. குணமடையாமல் இருந்து வந்த காயங்கள் தொடர்ந்தும் அவருக்கு தொல்லை கொடுத்து வந்தது. பின்னர் ஒஸ்லோவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தின்போது சூசை இதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார். 2004 ஒக்டோபரில் சூசை, தில்லையம்பலம் சிவநேசன் என்கிற பெயரில் உள்ள, என் 13565685 என்கிற கடவுச் சீட்டைக் கொண்டு, எயார்பஸ் 330 ரக ஸ்ரீலங்கா விமானசேவைக்குச் சொந்தமான யுஎல் 316 விமான இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் சிங்கப்பூருக்குப் பறந்தார். அவருடன் வன்னியில் இருந்த மருத்துவரான ஞானசேகரம் கமிலஸ் தர்மேந்திரா என்பவரும், குயின்ரஸ் சகாயரத்னராஜா, மற்றும் கோபாலப்பிள்ளை சத்திய முகுந்தன் என்கிற இரண்டு மெயப்பாதுகாவலர்களும் துணையாகச் சென்றனர். சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் இருந்த பின் அவர் கிளிநொச்சிக்கு திரும்பி வந்தார்.
நான் த ஹிந்து மற்றும் புரொண்ட் லைன் ஆகிய பத்திரிகைகளின் கொழும்புச் செய்தியாளராக பணியாற்றிய சமயத்தில் 1986ல் சூசையைச் சந்தித்துள்ளேன். அப்போது தொண்டமானாறு, செல்வச்சந்நிதி, முருகன் கோவில் சுற்றாடலில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு உண்மையான போராட்டத்தைக் காணவேண்டும் என்று நான் எனது ஆவலை வெளிப்படுத்தியபோது, எல்.ரீ.ரீ.ஈ யின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் என்கிற கேணல் கிட்டு, ‘சுக்லா’ என்கிற ஒருவரை அழைத்து – எனது எண்ணப்படி அவர் மரியநேசன் என்பவராக இருக்க வேண்டும் – சண்டை நடைபெறும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.
திடீரென தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட கிட்டு சூசையை அழைத்தார். பின்னர் கிட்டு சூசையை எனக்கு அறிமுகம் செய்து விட்டு சூசையைப் பற்றிச் சொன்னது, “இவர் அவதானமாகவும், பொறுமை மற்றும் பொறுப்புடனும் நடப்பவர்,இவர் உங்களை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பக் கொண்டுவந்து விடுவார்” என்று. பின்னர் எங்களுக்கு நல்வாழ்த்து கூறி விடை பெற்ற அவர் சூசையிடம் கூறிய ஒரே வார்த்தை “கவனம்” என்பது மட்டும்தான். பின்னர் சூசை எனது இளமஞ்சள் நிறத்திலான எனது மேல்சட்டையை அகற்றும்படி கூறியதையும் டெனிம் கால்சட்டையுடன் போரைக் காண்பதற்காக புலிகளின் வெவ்வேறு நிலைகளை நோக்கி அவருக்கு பின்னால் ஊர்ந்து சென்றதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த அனுபவத்தின் பின்னர் கிட்டுவும் சூசையும் என்னை பத்திரமாகத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்தனர்.
கம்பர்மலையைச் சேர்ந்த சத்யநாதன் என்கிற சங்கரின் தங்கையான சத்யதேவி என்பவரைத்தான் சூசை திருமணம் செய்திருந்தார். சங்கர்தான் மோதலின்போது மரணமடைந்த முதல் எல்.ரீ.ரீ.ஈ போராளி. அவர் 27 நவம்பர் 1982ல் மரணமடைந்தார், மேலும் அந்த நாளைத்தான் எல்.ரீ.ரீ.ஈ வருடந்தோறும் மாவீரர் நாளாக அனுஷ்டித்து வருகிறது. அவருடைய தங்கையான சத்யதேவியின் மேல் காதல் கொண்ட சூசை அவரை மணந்து கொண்டார். அந்த திருமணம் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களின் இணைப்பாக இருந்தது.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். கடைசிப் பையனுக்கு அவனது தாய்மாமனின் நினைவாக சங்கர் எனப் பெயர் சூட்டப்பட்டது .சங்கர் 2007ம் ஆண்டு தனது ஐந்தாவது வயதில் கடலில் நடந்த ஒரு விபத்தில் காலமானான். 2007ஜூலை 18ல் நான்கு புதிய படகுகள் கடற்புலிகளுக்கு கிடைத்தன .வட்டவாகல் கடற்கரையில் வைத்து அவை ஒட்டிப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. சூசை தனது கடைசி மகனுடன் அந்தப் புதிய படகுகள் ஒன்றினுள் பயணித்துக் கொண்டிருந்தார். விபத்து நடைபெற்ற அந்த துரதிருஷ்டமான நாளில் சங்கர் தனது தந்தையுடன் அந்தப் படகில்தான் அமர்ந்திருந்தான். ஒரு வேகப் படகு வேகமாகத் திரும்பி மற்றொரு படகுடன் மோதியது. அத்தோடு ஒரு பெரிய வெடிப்பும் ஏற்பட்டது.
சங்கர் கொல்லப்பட்டான். அதேபோல சூசையின் மெய்ப்பாதுகாவலரில் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்ற மூன்று அங்கத்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மற்றவர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டன. சூசைக்கு கழுத்து, முதுகு மற்றும் தலையின் பின்பகுதி என்பனவற்றில் கடும் காயங்கள் ஏற்பட்டன அவர் நினைவு தப்பிய ஒரு கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. புதுக்குடியிருப்பில் உள்ள பொன்னம்பலம் தனியார் சிகிச்சை நிலையத்துக்கு சூசை கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் ஒரு பெயர் வெளியிடப்படாத ஒரு இடத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ யின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சையளிப்பதற்காக அவர் வேகமாக கொண்டு செல்லப்படடார்.செப்டம்பர் 26, 2007 லிலேயே சூசை திரும்பவும் பகிரங்கமாகத் தோன்றினார்.
தனது குழந்தைகள்மேல் அளவற்ற பாசம் கொண்ட ஒருவர் சூசை. நெல்லியடிவாசிகள் அவரது மூத்த மகனான கடலரசனின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நினைவு கூர்கிறார்கள். சிவநேசன் குடும்பத்தினர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலான “கடல்புறாவின்” வடிவத்தில் ஒரு பிரமாண்டமான கேக்கினை உருவாக்கினார்கள். நெல்லியடியில் உள்ள சுபாஷ் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட கேக்குகளிலேயே அது நீளம், அகலம் மற்றும் உயரங்களில் மிகவும் பிரமாண்டமான ஒன்றாக இருந்தது, அதை ஒரு பிக் – அப் வாகனத்தில் வைத்தே பிறந்தநாள் வைபவம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லவேண்டி இருந்தது.
எனவே முடிவு அருகே நெருங்கி வந்தபோது, சூசை தனது மனைவியினதும் குழந்தைகளினதும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சூசையின் மனைவி சத்தியதேவி ,மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் மற்றும் சூசையின் மைத்துனியும் குழந்தைகளும் உட்பட்ட உறவினர்கள் சிலருடன் மே 12,2009ல் காரைத்துறைப்பற்றிலிருந்து ஒரு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் இலங்கை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப் பட்டார்கள். சத்யதேவி சூசையின் மனைவி என அடையாளம் காணப்பட்டார். அவரும் குழந்தைகளும் தனியாக வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அதன்பின்னர் அவரும் பிள்ளைகளும் திருகோணமலையிலுள்ள கடற்படை முகாம் வளாகத்தினுள் தடுத்து வைக்கப்பட்டனர். அதேபோல எல்.ரீ.ரீ.ஈ அரசியற்பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனின் விதவையான மனைவியும் பிள்ளைகளும் பனாகொடவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுடன் கூடிய விடுதலை வழங்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் அந்தக் குடும்பம் இப்போது கொழும்பு புறநகர் பகுதியில் வசித்து வருகிறது. அதேபோல சூசையின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுடன் கூடிய விடுதலை வழங்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் அந்தக் குடும்பம் இப்போது திருகோணமலையில் வசித்து வருகிறது.
சமீபத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் “த நேசன்” என்கிற ஆங்கில வார இதழுக்காக சாமரா லக்ஷன் குமார சத்யதேவிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் சத்யதேவி தனது சில அனுபவங்களை பதில்களாக நினைவு கூர்ந்திருந்தார். த நேசனின் பூரண அனுமதியோடு அவரது நேர்காணலை எனது தளத்தில் மறு பிரசுரம் செய்கிறேன்.
உங்கள் நண்பன் – டி.பி.எஸ். ஜெயராஜ்
சூசையின் மனைவி நடுக்கடலில் நடந்த நாடகத்தை நினைவு கூருகிறார்
-சாமரா லக்ஷன் குமார-
எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் ஒருமுறை அடுத்த ஈழப்போர் நடுக்கடலில்தான் நடைபெறும் என ஒருமுறை மிகைப்படுத்தி பேசியிருந்தார். அவரது அந்த மிகைப்படுத்தல் உதிப்பதற்கு காரணமாக இருந்தது, அவர்களது கடற்புலிகள் என்றழைக்கப்படும் போராளிகள் தங்களிடமுள்ள பல்வேறு வகையான கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கடற்படையினருக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருந்ததே. கடற்புலிகளின் தலைவர் சூசை, எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார், மற்றும் அவர் மனைவி சத்தியதேவி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சகிதம் ,தப்பிச் செல்வதற்காக அவரது கணவர் சூசை வழங்கிய படகு ஒன்றின் மூலம் நந்திக்கடல் பிரதேசத்தை விட்டு வெளியேற முயன்றார். த நேசனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சவாலான அந்த நாட்களையும் மற்றும் பாதுகாப்புக் காவலில் உள்ள அவரது தற்போதைய வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறார்.
உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள்? சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய என் சகோதரனின் ஒரு நண்பராவார். அந்த நேரத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். 1982ல் எல்.ரீ.ரீ.ஈ க்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் போராளி எனது அண்ணன். எனது அண்ணனின் மறைவுக்குப் பின்னரும் கூட சூசை எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. யாருக்காவும் அவர் தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவி புரிபவராகவும் மற்றும் அவசியப்படுபவர்களுக்கு உதவி புரிவதில் தயக்கம் காட்டாதவராகவும் இருந்தார். அவருடைய நல்ல பழக்கங்கள் என்னைக் கவர ஆரம்பித்தன. நான் அவரை விரும்பத் தொடங்கினேன், நாங்கள் நெருக்கமானவர்களாக மாறினோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து இருந்ததால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வடமராட்சி பகுதியின் உள்ளுர் தலைவராக இருந்தார். எனினும் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், மற்றும் அதன் பின் விரைவிலேயே அவர் கடற்புலிகளின் தலைவராக மாற்றம் பெற்றார்.
நீங்களும் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டிருந்தீர்களா?
இல்லை
சூசையை மணந்த பிறகும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா?
அதன் பிறகும் மாறவில்லை.
ஏன்?
அது அவசியம் என்று நான் கருதவில்லை சூசையும் என்னை எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்படி ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.
சூசை, எல்.ரீ.ரீ.ஈ விடயங்களைப்பற்றி வீட்டில் கதைப்பாரா?
அப்படியான விடயங்களை அவர் ஒருபோதும் விவாதிப்பதில்லை. நாங்கள் வீட்டில் எங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களைப் பற்றியே பேசுவோம்.
அவர் வீட்டுக்கு வந்ததும் எதைப்பற்றி கதைப்பார்?
அவருக்கு சிறிதளவு ஓய்வே கிடைக்கும். அவர் வீட்டுக்கு வருவது பிரதானமாக உறங்குவதற்காகவே.
உங்கள் வீடு எங்கே உள்ளது? ஆரம்பத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம், ஆனால் இராணுவத்தினர் “ஒப்பரேசன் ரிவிரச” நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர், நாங்கள் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். நாங்கள் தேவபுரம், முல்லைவெளி, வள்ளிக்குளம் மற்றும் இறுதியாக 2007ல் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்தோம்.
சூசை ஒரு வலிமையான மனிதராக அறியப்பட்டிருந்த போதிலும், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததாக அநேகர் எழுதி அல்லது சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா? அவர் தனது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தார். எங்கள் மகனின் முதலாவது பிறந்த நாளின்போது, எங்கள் மகனுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலின் வடிவத்திலிருந்த கேக் ஒன்றை கொண்டுவந்தார். அது நெல்லியடியில் இருந்த சுபாஷ் வெதுப்பகத்தில் அது தயாரிக்கப்பட்டது. அவரது கடமைகள் அவரது பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவருக்கு இடமளிப்பதில்லை, அதனால் அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை அவர் என்னிடம் ஒப்படைத்திருந்தார்.
2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அவரின் அந்த பயணத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா? இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் மேலதிக சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.
சிங்கப்பூருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது? அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரு தடவைகள் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினார்.
பிரபாகரனுக்கும் சூசைக்கும் இடையே உறவு எப்படியாக இருந்தது? சூசை பிரபாகரன் மீது உயர்வான நம்ப��
சூசையின் மனைவியிடம் மிரட்டி எடுக்கப்பட்ட பேட்டி: த நேஷன் ?athirvu!04 February, 2012 by admin கடல் புலிகளின் தளபதியான சூசை அவர்களின் மனைவி முள்ளிவாய்க்காலில் இருந்து 2009ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி வெளியேறி இருந்தார். அவர் அங்கிருந்து கடல் மார்க்கமாகத் தப்பி இந்தியா செல்ல முனைந்தவேளையில் இலங்கைக் கடற்ப்படையால் கைதுசெய்யப்பட்டார் என்பது யாவரும் அறிந்த விடையம். அவரிடம் பெருந்தொகையான பணமும் நகைகளும் இருந்ததாக இலங்கை இராணுவம் செய்தி வெளியிட்டது. பின்னர் அவர் தனியான சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி கொழும்பு புறநகர்ப்பிரதேசம் ஒன்றில் வசித்துவருகிறார். இவ்விடம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்பதும் இவரை இரகசியப் பொலிசார் அவதானித்து வருவதும் பலர் அறிந்த விடையம். புலிகளின் சிரேஷ்ட தளபதிகள் சிலர் மேல் கரி பூசும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தற்போது கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதற்கு அவர்களது உறவினர்களையே பயன்படுத்திவருகிறது இலங்கை அரசு. இதனூடாக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள புலிகளின் சிரேஷ்ட தளபதிகளை மக்கள் மனதில் இருந்து அகற்ற இலங்கை அரசானது பெரும் முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் சிங்கள அரசின் அடிவருடியான த நேஷன் செய்திச் சேவை சூசையின் மனைவியை ஒரு நேர்காணல் கண்டதாகத் தெரிவித்துள்ளது. அதில் சூசையின் மனைவியிடம் பல கேள்விகள் கேட்க்கப்பட்டதாகவும் அவர் கூறிய பதில் என்று கூறி பல விடையங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் த நேஷன் நிருபர் ஒருவர் சூசையின் மனைவியிடம் "நீங்கள் மே 12ம் திகதி புதுக்குடியிருப்பில் வைத்து பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் பார்த்தீர்களா" என்று கேட்டுள்ளார். சூசையின் மனைவி "ஆம்" என்று பதிலளித்ததாக நிருபர் கூறுகிறர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், மே12ம் திகதி புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் தான் இருந்தனர் புதுக்குடியிருப்பு இலங்கை இராணுவத்தின் கைகளில் அப்போது வீழ்ந்து விட்டது. மற்றும் மே 18ம் திகதியோடு முள்ளிவாய்க்காலும் இராணுவத்தின் கைகளில் வீழ்ந்துவிட்டது. அப்படி இருக்கும்போது சூசையின் மனைவி ஏன் இவ்வாறு பதிலளித்தார் ?
ஒருவேளை நிருபர் தான் பிழையாகக் கேட்டார் என்றாலும், முள்ளிவாய்க்காலில் இருந்த சூசையின் மனைவி மே 12, தாம் புதுக்குடியிருப்பில் இருந்ததாக ஏன் சொல்லவேண்டும் என்ற கேள்விகள் இங்கே எழுகின்றது. த நேஷன் என்னும் செய்திச் சேவை உண்மையில் சூசையின் மனைவியிடம் தான் இந்தப் பேட்டியை எடுத்ததா என்ற கேள்விகளும் இல்லையேல் அவரை மிரட்டி இந்த பேட்டியை இவர்கள் எடுத்தார்களா என்ற சந்தேகமும் வலுப்பெறுகின்றது. பெருந்தொகையான நகைகளுடன் அவர் கைதானார் என்று சொல்லிவரும் இணையங்கள், இலங்கை அரசு வன்னியில் பீப்பா பீப்பாவாக கைப்பற்றிய தமிழர்களின் நகைகள் குறித்து எதுவும் பேசுவது இல்லையே ஏன் ? அதற்கு என்ன நடந்தது என்பது குறித்து எவரும் கேள்விகள் கேட்ப்பது இல்லை. |
Geen opmerkingen:
Een reactie posten