தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 februari 2012

மஹிந்தரால் மனம் உடைந்து போன அமைச்சர் தேவானந்தா!



ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் கடந்த யாழ். மாநகரசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் நின்றுதான் போட்டியிட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எடுத்து இருந்த தீர்மானத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகவும் மனம் உடைந்து போய் இருந்தார் என்று மிகவும் நம்பத் தகுந்த வட்டாரம் மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன.கத்தோலிக்க திருச்சபையின் யாழ். மாவட்ட பேராயர் இத்தீர்மானம் ஜனாதிபதி மஹிந்தரால் எடுக்கப்பட்ட பின்னர் அமைச்சர் தேவானந்தாவை சந்தித்து இருக்கின்றார்.

அப்போது தேவா சோகமயமாக காணப்பட்டு இருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்தரின் தீர்மானம் குறித்து ஆயரிடம் முறையிட்டு இருக்கின்றார்.

பல்லாண்டு காலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஈ.பி.டி.பி கட்சியை வளர்த்து இருந்தார் என்றும் தற்போது ஜனாதிபதியின் கட்சிக்குள் கலக்க வேண்டி ஏற்பட்டு இருக்கின்றது என்றும் சொல்லி கவலைப்பட்டு இருக்கின்றார்.

இது சம்பந்தப்பட்ட தகவல்களை தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டார் ஆயர்.

யாழ். மாநகரசபைத் தேர்தல் தொடர்பாக தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 07 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலமாக இச்செய்திகள் கிடைத்து உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten