தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 februari 2012

அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதி மஹிந்தவிடம் இப்படிக் கூறினாராம் !!



தீர்வு காண முடியாத பிரச்சினைகளை முன்வைக்காமல் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளையே அனைவரும் முன்வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான கட்டடத்தை இன்று காலையில் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.தீர்வுகாண முடியாத பிரச்சினைகளை அரசியல்வாதிகள் முன்வைத்தால் அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது. பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு தீர்க்க முடியாத பிரச்சினைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 'திம்புப் பேச்சுவார்த்தையில் தீர்க்க முடியாத கோரிக்கைகளை ஏன் முன்வைத்தீர்கள் என நான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டேன். அதற்கு அவர், தீர்வு காண முடியாத கோரிக்கைகளை முன்வைத்தால் தான் அதற்கு எப்போதுமே தீர்வு காண முடியாது எனத் தெரிவித்தார். எனவே தீர்வு காணக் கூடிய கோரிக்கைகளையே அனைவரும் முன்வையுங்கள்" என்றார்.
ஊடகங்கள் சில இனவாதத்தை தூண்டும் செய்திகளை வெளியிடுவதையே குறிக்கோளாகக்கொண்டு செயற்பட்டுவருகின்றன. மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஊடகங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவ் ஊடகங்கள் மக்களை ஒற்றுமைப்படுத்தும் செய்திகளையே வெளியிடவேண்டும்.
மேலும், இலங்கையில் வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை எவராலும் மறுக்க முடியாது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இக் கட்டடத்தை அமைப்பதற்கு 158 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது" எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten