ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, புனிதமான ஐ.நா.வின் இராஜதந்திர சிறப்பு பாதுகாப்பைப் பயன்படுத்திக் தப்பித்துக் கொள்ளும் சர்வதேச போர்க்குற்றவாளி.
சர்வதேச போர்க்குற்றவாளியென அறிவிக்கப்பட்ட படைத் தளபதியைக் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் ஆலோசகராக செயலாளரினால் அண்மையில் நியமனம் செய்யப்பட்டார்.
கனடா, அமெரிக்கா, பிரித்தானிய போன்ற மேற்குலக நாடுகள் இலங்கையில் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விசாரிப்பதற்கு சர்வதேச ரீதியாக சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்திவரும் நிலையில் ஐ.நா செயலாளர் நாயகத்தினால் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டமை பல்வேறு தரப்பினரிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியைத் தண்டிக்கும் உலகின் அதி உயர்ந்த ஸ்தாபனமே பதவியைக் கொடுத்து சர்வதேச குற்றவாளியை தப்பித்துக் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதனடிப்படையில், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கை இராணுவ 58 ஆவது பிரிவின் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடமிருந்து நஷ்ட ஈடுகோரி இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக கடந்த செப்டெம்பர் மாதம் சவேந்திர சில்வாவுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திர சிறப்பு பாதுகாப்பு உள்ளது எனவும் அவரை விசாரிக்க தமக்கு அதிகாரம் இல்லையெனவும் நியூயோர்க் மாவட்ட நீதிபதி ஜே.போல் ஒட்கென் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.
இதேவேளை, செயலாளர் நாயகம் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார். அதுமாத்திரமல்ல, சிறீலங்காவிடமிந்து பெறுமதிமிக்க இரத்தினபுரி இரத்தினக் கற்கள் கையாடல்களைப் பெற்றுள்ளதாக இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், செயலாளர் நாயகத்தினால் சுயமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten