நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் Kinderkookkafé என்ற குடும்ப உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க குழந்தைகளால் நடத்தப்படுகின்றது.
உணவைச் சமைத்தல், பரிமாறுதல், சுத்தப்படுத்துதல், பில் போடுவது என்று எல்லாமே குழந்தைகள் தான் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் அடங்கிய மெனு எளிதாக தயாரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு தயாரிக்கும் உணவுகள் நல்ல ஆரோக்கியமாகவும், மிகக் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இந்த உணவகத்தை மேற்பார்வையிடவும், இச்சிறுவர்களுக்கு சிறிய வழிகாட்டல்களை மேற்கொள்வதற்காக இரண்டு பெரியவர்கள் இங்கு காணப்படுகின்றனர். மேலும் பாடசாலை முடிந்ததும் குழந்தைகளை பெற்றோர்கள் இந்த உணவகத்தில் கொண்டுவந்து இறக்கி விடுகின்றனர். அவர்கள் இந்த வயதிலேயே உணவு தயாரித்தல், பொறுமையாகப் பரிமாறுதல் போன்றவற்றை பழக வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மேலும் இங்குள்ள விசேடம் என்னவென்றால் குழந்தைகள் தாங்கள் சமைத்த உணவுகளை பெற்றோர்களுடன் பகிர்ந்து உண்பது தான். இப்படியாக உணவு தயாரிப்புக்களைப் பழகுவதால் இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். |
Geen opmerkingen:
Een reactie posten