விடுதலைப்புலிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்த தமிழீழ வைப்பகம் திறம்படச் செயற்பட்டு வந்ததாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை பல வெளிநாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் சேர்க்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள் நிதிச்சேவை ஒன்றை நிறுவியதாகவும் அமெரிக்க தூதர் விபரித்துள்ளார்.
இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் வரி அறிவிடும் கட்டமைப்பையும் சுங்க வரி மற்றும் தமிழீழ வங்கிகளை நிறுவியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காசோலைகளுடன் கூடிய கணக்குகளை வாடிக்கையாளர்கள் திறக்க ஏதுவாக தமிழீழ வங்கி இயங்கியதாகவும், மற்றும் உலகில் ஒரு தீவிரவாத அமைப்பு வங்கி ஒன்றை நடத்துவது இதுவே முதல்தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தமிழீழ வங்கி மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவல்களை அமெரிக்க தூதுவர் தமது தலைமயகத்துக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இத் தகவல்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten