வன்னிப் போரில் கடமையாற்றிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஹிலாரி கிளின்ரன் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தவில்லை என ஹிலாரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஹிலாரி கிளின்ரன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சிரேஸ்ட படையதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten