தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 februari 2012

ஜெர்மன் சுற்றுலாப் பயணி மீது துஸ்பிரயோகம் !!



இலங்கையில் மற்றுமொரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி மீது, நேற்று அதிகாலை 3 மணியளவில் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹோட்டல் அறையில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குறித்த ஜெர்மன் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹோட்டலில் குறித்த ஜெர்மனிய பெண்ணும் அவரது காதலரும் அதிகாலை 2.30 மணி வரை மதுபானம் அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு மதுபானம் அருந்தியதனால் தாம் ஆழ்ந்த நித்திரை கொண்டதாக, குறித்த ஜெர்மன் பெண் தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபர் உறங்கிக் கொண்டிருந்த ஜெர்மனிய பெண்ணை துஸ்பிரயொகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
முதலில் தமது காதலர் உறவு கொள்வதாக எண்ணிய ஜெர்மனிய பெண், பின்னர் விழித்து பார்த்த போது வேறு ஒருவர் தம்முடன் உறவு கொள்வதனைக் கண்டு சத்தமிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நபர் தப்பிச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திக்வல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten