புதுக்கடை நீதிமன்ற கட்டட வளாகத்தில் இருந்து இரு கைக்குண்டுகளும் வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து 7 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பொது மக்களிடம் இருத்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைக்குண்டுகள் மீட்கப்பட்டதை அடுத்து அலுத்கடை நீதிமன்ற கட்டட வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைவைக்கப்பட்டு நாளையுடன் (08) இரு வருடங்கள் நிறைவு பெறுகின்ற நிலையில் அவரை விடுதலை செய்யுமாறு கோரி அவரது பாரியார் அனோமா பொன்சேகா தலைமையில் நாளை புதுக்கடை பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கொழும்பின் பிரதான இரு பகுதிகளிலிருந்து ஒன்பது கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten