வடக்கு மாகாணத்தில் இருக்கும் இராணுவ முகாம்கள் விரைவில் அகற்றப்பட்டுவிடும் என இந்திய ஊடகங்களுக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கில் பெரும்பாலான இராணுவ முகாம்களை குறைக்கும் நடவடிக்கையில் வெற்றியடைந்துள்ளதாகவும், பத்தில் இரண்டு பகுதிகள் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு இன்னும் ஒரு மாதமே தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவின் ஏற்பாட்டில் சென்னையில் இருந்து சென்ற சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்களிடமே, இந்தத் தகவலை குறிப்பிட்டதாக பிரிஐ வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் எந்தப் பகுதியிலும் கடுமையான பாதுகாப்பு நடைமுறையில் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து நான் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. எனினும் இராணுவ முகாம்கள் உள்ளன. என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten