இலங்கையில் பொலிஸ் மற்றும் அரசியல் கட்சிகளிலே அதிக ஊழல் இடம்பெறுவதாக ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் நடத்திய கணிப்பீடொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை மக்களில், 1000 பேரிடம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் ஏறத்தாழ 50 சதவீதமானோர் பொலிஸ் மற்றும் அரசியல் கட்சிகளில் அதிகளவில் ஊழல் இடம்பெறுவதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இக்கருத்துக் கணிப்பின்படி பொலிஸாரின் சேவைகளிலும், அரச திணைக்களங்கள் மீதும் மக்கள் அதிகளவில் அவநம்பிக்கை கொண்டிருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்குபற்றியவர்களில் 23 சதவீதமானோர், ஒரு குறித்த சேவையைப் பெறுவதற்காக தாம் லஞ்சம் வழங்கியுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten