இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஏமாற்றமளிப்பதாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜான் ரங்கின் தெரிவித்துள்ளார்.
'ஆணையாளரைக் கேளுங்கள்’ எனும் காணொளி நிகழ்ச்சியூடாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே இக்கூற்றினை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுத தலைவரினால் நியமிக்கப்பட்ட, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்….
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, எராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என உணர்ந்தும் அது பற்றி ஆராயவில்லை. இது போன்று பல விடயங்களுக்கு பதிலளிக்காமலும், இன்னும் பல விடயங்கள் கருத்திற் கொள்ளப்படாமலும் விடப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை விசாரிக்க சுயமானதும், பக்கச் சார்பற்றதுமான விசாரணை ஒன்று வேண்டும்என்பதை பிரித்தானியா அரசாங்கத்தின் நிலைப்பாடு.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு , டிசம்பர் 16ம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டைர் பர்ட், சனவரி 12ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ள அரசியல் நல்லிணக்கம், மீள் குடியேற்றம், மனித உரிமை மீறல், பத்திரிகையாளரின் மீது தாக்கல்கள், காணாமல் போதல் போன்ற நல்ல பரிந்துரைகளை வரவேற்கின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவே இலங்கைக்கு பரீட்சைக் களமாக இருக்கும் என பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜான் ரங்கின் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten