தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 februari 2012

சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும்: சீனா!


சீனா ஏன் மனிதத்தை தொலைத்து இப்படி அநீதியை ஊக்குவிக்கிறது,சீனா நம்பிய நட்புநாடுகள் இன்று ஆட்சிமாறி தலைவர்களும் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றனர்.நாளை தணிக்க போகும் சீனா மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தால் உலகுக்கு தலைமை தாங்கலாம்,இல்லையேல் சீனராலேயே தலைமை அழிக்கப்படும்!!
சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் எந்தவொரு அழுத்தத்தையும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு சீனா முழுமையான ஆதரவளிக்கும் என ஷென்சீ மாநில கொம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு செயலாளர் யூவான் சுன்கீன் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்த போது சுன்கீன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் எழும் பிரச்சினைகளின் போது சீனா இலங்கையுடன் கைகோர்த்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனTk; சுன்கீன் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten