தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏன் கருத்திற்கொள்வதில்லை என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரங்களை மேற்கொள்ள உரிய பொறிமுறை அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் உள்ள சில அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை நம்பி இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு முன்னாள் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபேன்ட் ஒரு உதாரணமாக இருந்தார் என்று சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளை, படையினர் தோற்கடிக்கும் வரையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேசம் எவ்வித கேள்விகளையும் முன்வைக்கவில்லை.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட போதுக்கூட நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து வந்தது என்றும் திருமதி பெர்ணான்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டோர் முன்வந்து தமது பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் பெர்ணான்டோபுள்ளே கோரியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten