தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 februari 2012

13 ஆவது அரசியலமைப்பை எதிர்ப்பது சட்டத்தை மீறும் செயல் - திலான் பெரேரா !!



13 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுவது என்பது, நாட்டின் அடிப்படைச் சட்டத்தை மீறும் செயலாகும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்படுத்தல் துறை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் நலன்கருதி எந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடுவதை சிலர் வழக்கமாகவே கொண்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
13 ஆவது அரசியலமைப்பு என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஏற்கனவே அங்கமாக உள்ள அம்சமாகும்
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதன் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உள்ளுர் மட்டத்தில் அதிகாரங்களை பகிரமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு எதிராக சில வெளிநாடுகள் காட்டுகின்ற கடும் போக்கை நட்பு நாடுகளின் மூலம் தோற்கடிக்க முடிந்துள்ளதாக திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten