அமெரிக்காவின் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டவியல் மாணவர்கள் இலங்கைக்கான தங்களது பயணத்தில் கசப்பான அனுபவங்களுடன் நாடு திரும்பியுள்ளனர்.
மனித உரிமைகளை நெறிபடுத்துவதும், காப்பதும் இவர்களின் கற்கை நெறித் திட்டத்தின் முக்கிய விடயமாக உள்ள நிலையில், இலங்கைக்கு வருகை தந்திருந்த வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டவியல் மாணவர்கள் இலங்கைப் பாதுகாப்புச் அமைச்சினால் ‘அன்பாக’ எச்சரிக்கப்பட்ட விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இவர்களது பயணத்தின் போது, இலங்கயிலுள்ள வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தன்னார்வலர்கள், முகாம்களில் இருக்கும் இடம் பெயர்ந்த மக்கள், உயர் நிலை அரச அதிகாரிகள், உயர் நிலை படை அதிகாரிகள், துன்புறுத்தப்பட்ட மக்கள் மற்றும் பொது மக்கள் என பலருடம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
அமெரிக்க சட்டக் கல்லூரி மாணவர்களின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குறித்த மாணவர்களை அழைத்த பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
யாருடன் வேண்டுமென்றாலும் பேசலாம் ஆனால் ‘சரியானவர்களுடன்’ பேசுவதை மட்டுமே தாங்கள் விரும்புவதாக பாதுகாப்புத்துறை அமைச்சக புலனாய்வாளர்களால் ‘அன்பாக’ எச்சரிக்கப்பட்டுள்ளனர் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள். இந்நிலையில், தங்களுக்கு நடந்த இந்த அனுபவதத்தின் ஊடாக இலங்கையில் என்ன நடந்திருக்கும், நடக்கின்றது என்பதனை உணரக்கூடியுள்ளதாக தங்களது இலங்கைக்கான பயண அறிக்கையில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.http://www.lawweekly.org/?module=displaystory&story_id=3592&edition_id=196&format=html
ஒவ்வொரு பனிகால விடுமுறைக்கும் வேவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மனித உரிமைகள் பற்றி ஆராய்ந்து வருவது, வேர்ஜினியா பல்கலைக்கழகத்தின் சட்டவியல் மாணவர்களின் கற்கை நெறியில் ஒரு அங்கமாக உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
Geen opmerkingen:
Een reactie posten