02 February, 2012 by admin
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹலறி கிளிங்டன் அவர்கள் இலங்கையில் உள்ள சில அமைச்சர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளதாகப் பரவலாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இக் கடிதத்தின் ஒரு பிரதியை இலங்கை அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கும் வழங்கியுள்ளார். இந் நிலையில் இக் கடிதம் மகிந்தர் பார்வைக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடிதத்தை வாசித்த உடனே கடும் கோபம் அடைந்த மகிந்தர் உடனடியாக ஜி.எல் பீரிசை அழைத்து இனி அமெரிக்கா செல்லும்போது அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம் எனவும் என்னுடன் கலந்தாலோசித்த பின்னரே எந்த முடிவையும் எடுக்கவேண்டும் எனவும் கடுமையான தொணியில் தெரிவித்துள்ளார். இக் கடிதத்தின் எதிரொலியாகவே ஈரானில் தமது தூதுவராலயத்தை திறக்கவும் மகிந்தர் உத்தேசித்தாராம் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது.
அப்படி அக் கடிதத்தில் என்ன தான் உள்ளது என்று அலசினால், அதில் அமெரிக்கா மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்குச் சாதகமாக இருக்காது என்பது வெளியாகியுள்ளதாம். மற்றும் அக்கடிதத்தின் ஆரம்பத்தில் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக சில நல்ல விடையங்கள் கூறப்பட்டிருந்தாலும், பிற்பகுதியில் பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மகிந்தரை பதவியில் இருந்து இறக்கி அமெரிக்க சார்பாக இயங்கவல்ல ஒருவரை அரச அதிபராக நியமிப்பது தொடர்பாகவும் அமெரிக்கா ஆலோசித்துவருவதாக தாம் அறிவதாக மகிந்தர் ஜி.எல்.பீரிசிடம் தெரிவித்துள்ளார். இதுவே மகிந்தர் கடும் ஆத்திரமடைய காரணம் என விடையம் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Geen opmerkingen:
Een reactie posten