தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 februari 2012

எங்களை நாடு கடத்தினால் வாழ்க்கை ஆபத்தாகி விடும்: கனடா அகதிகள் !athirvu!


03 February, 2012 by admin
கனடா செல்ல முயற்சித்த வேளை,மேற்கு ஆபிரிக்காவின் டோஹோவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 இலங்கை அகதிகள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் உயிராபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

டோஹோ தலைநகரான லொமே பகுதி வெளியரங்கு ஒன்றில் இராணுவத்துடன் இந்த இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ��விசா காலாவதியாகி கடந்த வருடம் ஒக்டோபர் 24 ஆம் திகதி தொடக்கம் தங்கியிருந்த குற்றச்சாட்டில் நாம் கைது செய்யப்பட்டுள்ளோம். எங்களை நாடு திரும்புமாறு வற்புறுத்துகின்றனர். பலாத்காரமாக நாங்கள் நாடு கடத்தப்படலாம்� என தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வடக்கு,கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 200 தமிழர்கள் கனடாவுக்கு செல்லும் நோக்கில் படகில் ஏற்றிச் செல்லப்பட்டு டோஹோவில் கைவிடப்பட்டதாகவும் அவர்கள் கொண்டு லொமே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பு முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இருந்து மும்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் மும்பாயில் இருந்து அடிஸ்அபாபாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சுற்றுலா விசா மூலம் லொமேவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தங்களை நாடு கடத்துவதை விட உள்நாட்டு சிறைக்குள் வைத்திருப்பது சிறந்தது என ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். எங்களில் அநேகமானோர் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலைச் சேர்ந்தவர்கள். எங்களை நாடு கடத்தினால் எமது வாழ்க்கை ஆபத்தானதாகி விடும் என இலங்கை அகதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten