தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 februari 2012

கனடிய அரசைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரிதும் நம்பியிருக்கிறது: பா.உ சுரேஸ் பிரேமசந்திரன்!!



இறுதிப் போரின் போது சுமார் 75,000ல் இருந்து 146,679 பேர் வரையானவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வு கிடைக்க கனடிய அரசு பெரிதும் உதவ வேண்டுமெனதும் கனடிய மனித உரிமை மையத்தின் மாநாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து காணொளியூடாக உரையாற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
காணாமற் போணவர்களின் இந்த எண்ணிக்கை அப்போது முல்லைத்தீவு அரச அதிபராக இருந்த இமல்டா சுகுமாராலும், மன்னார் பேராயர் இராயப்பு யோசப் அவர்களாலும் முன்னிலைப்படுத்தப்பட்டது எனவும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு இதனைக் தனது அறிக்கையில் குறிப்பிடத்தவறிவிட்டது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரின் போதான கற்ககைள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது வன்னியில் இறுதிப் போரில் பலியான பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றிய குறிப்புக்களையோ, அங்கவீனர்களானவர்கள், காணாமல் போனவர்கள் போன்றோரின் விபரங்களைக் கொண்டிருக்கவில்லை.
சர்வதேசத் தலையீடு மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைக்கு உறுதியானதொரு தீர்வை ஏற்படுத்த உதவும் எனவும் மகிந்த அரசானது பராளுமன்றத் தெரிவுக்குழு மற்றம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு போன்றவற்றில் மூலம் சமர்பிக்க முயலும் தீர்வுகள் ஏதும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கனடிய அரசாங்கம் ஆக்கமானதொரு தீர்விற்காக வழிவகுக்கும் என்ற நம்பிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், தமிழ்மக்களிடம் உள்ளதாகவும் கொள்கைவழி நிற்கும் கனடிய அரசு இதற்கு உதவ வேண்டுமெனவும் இந்த மாநாட்டினூடாக வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.
சிங்கள பௌத்த மேலாதிக்கம் மேலோங்கியுள்ள இலங்கைத் தீவில் தென்பகுதித் தலைவர்கள் தமிழர்களிற்கு உரிமை கொடுத்தால் அவர்களால் பிரிந்து போய் விடுவார்கள் என்ற கற்பனா வாதத்தில் இருப்பதாகவும் இந்நிலையில் சர்வதேசத்தின் தலையீட்டுடனே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்றும் தெரிவித்தார்.
கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட இந்த கற்கை மாநாட்டில் 24இற்கு மேற்பட்ட கனடாவின் சகல கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதேவேளை, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலமாகவுள்ள கியூபெக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியிலிருந்து கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அன்றைய தினம் இரவு கனடியத் தலைநகரில் இடம்பெற்ற சீனர்களின் புதுவருட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது,
தான் அன்று பிற்பகல் கனடிய மனிதவுரிமை மையம் என்ற அமைப்பு நடாத்திய மாநாட்டில் கலந்து கொண்டதை அவர்களிற்கு எடுத்தியம்பியதோடு ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதவுரிமைக்காக அந்த மாநாடு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததோடு,
பாராளுமன்ற உறுப்பினர்களின் மதியவுணவறையில் கூட அந்த மாநாடே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பேசுபொருளாக இருந்ததாகவும், கனடிய அரசபொறிமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஏனைய இனங்களும் கனடிய மனிதவுரிமை மையத்தின் ஒழுங்கமைப்பைப் பின்பற்றி, தங்களது செய்தி கனடியத் தலைவர்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது இந்த மாநாட்டின் சிறப்பை தெளிவாக எடுத்தியம்பியது.

Geen opmerkingen:

Een reactie posten