முன்னாள் லிபியா ஜனாதிபதி கடாபியின் ரத்தக்கரை படிந்திருக்கும் சட்டையும், அவர் இறக்கும் போது அணிந்திருந்த வெள்ளி திருமண மோதிரமும் 2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விடப்படவுள்ளது. 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி கடாபி போராட்டக்காரர்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 25ம் திகதி லிபிய பாலைவனப் பகுதியில் கொல்லப்பட்டார். அவரது உடலைப் பார்க்க மக்கள் பேரார்வம் காட்டினர். இந்நிலையில் கடாபியின் ரத்தக் கரை படிந்திருக்கும் சட்டையும், இறக்கும்போது அவர் அணிந்திருந்த வெள்ளி மோதிரமும் லிபியாவைச் சேர்ந்த அகமது வார்பாலி என்பவருக்கு கிடைத்துள்ளது. அதை அவர் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விட்டுள்ளார். இதுவே இந்த ஏலம் ஐரோப்பாவில் நடந்திருந்தால் இன்னும் அதிக பணம் கேட்டிருப்பேன் என்று வார்பாலி தெரிவித்துள்ளார். இந்த ஏலம் குறித்து தகவல் அறிந்த பலர் பேஸ்புக்கில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த மோதிரம் கடாபியுடையதே கிடையாது. அது லிபிய மக்களின் பணம். எனவே அந்த மோதிரத்தை ஏலத்தில் விடக்கூடாது என்று ஒருவரும், மோதிரத்தை விற்காவிட்டால் கடாபியின் மகன் சைபை 20 பில்லியன் டொலருக்கு விற்கலாமே என்று இன்னொருவரும் தெரிவித்துள்ளனர். |
Geen opmerkingen:
Een reactie posten