தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 februari 2012

யாழ் விஜயம் செய்த அமெரிக்க குழு காணாமல் போனவர்களின் தகவல்கள் கேட்டபோது தயங்கி நின்ற அரச அதிபர் இமெல்டா..


[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 04:19.09 PM GMT ]
அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் தூதர் ஸ்டீபன் ரெப் தலைமையிலான குழுவினர் யாழ்.குடநாட்டிற்கு இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வருகை தந்திருந்தனர்.


வருகையின் முதல் சந்திப்பாக அரச அதிபரை சந்தித்த இக்குழு, அரச அதிபரிடம் காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்களை கேட்டுள்ளனர். எனினும் அவ்வாறான தகவல்கள் எவையும் மாவட்டச் செயலகத்திடம் இல்லாத நிலையில், அரச அதிபர் கையை பிசைந்து கொண்டு நின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்குழுவினர் யுத்தம் இடம்பெற முன்னர் மாவட்டத்திலிருந்த மக்கள் தொகை யுத்தத்தின் பின்னர் மாவட்டத்திலுள்ள மக்கள் தொகை ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர்.
யாழ்.மாவட்டத்திலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாகவும், அந்தப் பகுதியில் தற்போது என்ன நடந்து வருகின்றது மிதிவெடியகற்றல் செயற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்துள்ளதுடன், மாவட்ட வரைபடத்திலும் கேட்டு அவதானித்தனர்.
இவற்றோடு, யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டவர்கள். அங்கவீனர்களாக்கப்பட்டோர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை தொடர்பிலும் அரச அதிபரிடம் கேட்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தக் குழு வலிகாமம் வடமராட்சி போன்ற பகுதிகளிற்கும் இன்று விஜயம் செய்து பொதுமக்களை சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் போர்க்குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாகவும் இதற்கான ஆய்வுப் பணிகளையே தற்போது மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten