தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 februari 2012

கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் இரகசிய சுவிஸ் விஜயம் குறித்து அரசாங்கம் கவனம்



கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சுவிஸ்சர்லாந்து விஜயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரகசியமான முறையில் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் சுவிஸ்சர்லாந்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு முதலமைச்சர் சுவிஸ்சர்லாந்தில் சந்தித்தவர்கள் மற்றும் அமைப்புக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த பிள்ளையான் இணங்கினார் என்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கோரி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten