கூட்டமைப்பு முன்வைக்கின்ற கோரிக்கைகள் தீர்க்கப்பட முடியாதவையாக இருக்கின்றன.
[ Monday, 06 February 2012, 09:18.18 PM. ]
இனப்பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வு எட்டப்படக்கூடாது என்பதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்க்கமுடியாத திட்டங்களை முன்வைத்து வருவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி திம்புப் பேச்சுவார்த்தை தொடக்கம் இந்த நிலை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றும்போது ஒரு முறை திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டவற்றை ஏன் நிராகரித்தீர்கள் என டக்ளஸிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் பிரச்சினை தீர்க்கப்படக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதே நிலைப்பாடுதான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்றும் கூட்டமைப்பு முன்வைக்கின்ற கோரிக்கைகள் தீர்க்கப்பட முடியாதவையாக இருக்கின்றன. இதற்கும் அதுவே காரணம். இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விடக்கூடாது என கூட்டமைப்பு திடமான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.
யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் புதிய வாழ்வை ஆரம்பித்திருக்கின்றீர்கள் இந்த நாட்டில் வடக்கு மக்கள் தெற்கு மக்கள் மலையக மக்கள் என்ற பேதத்திற்கு இடம் கிடையாது. ஆனால் நீண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கே நாம் அதிகளவு உதவிகளைச் செய்து வருகின்றோம் இன்று உங்களுக்கு சகலதும் கிடைத்திருக்கின்றது.
மேலும் இந்த நாட்டில் தமிழ் ஊடகங்கள் யுத்தம் முடிந்த பின்னரும் கூட தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் இனவாதத்தை கக்கிவருகின்றன. இதனாலேயே அன்று மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டார்கள். எதிர்காலத்திலும் மக்களை அவ்வாறு தவறாக வழி நடத்த அவை இன்றும் முயற்சிக்கின்றன.
இதேபோல் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் புத்திஜீவிகள் தனவந்தர்கள் இலங்கைக்கு வந்து எமது நாட்டின் உயர்வுக்காக உழைக்கவேண்டும். இதை நாம் ஒரு கோரிக்கையாக முன்வைக்கின்றோம் எனவே இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒரே மக்களே அவர்களுக்குள் பிரிவினைகள் கிடையாது. பிரிவினைக்கு நாம் அனுமதிக்கவும் மாட்டோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten