வை திஸ் கொலைவெறி பாடல் இன்றைய இளைஞர்களை கொள்ளை கொண்டுள்ளது என்பதை ஒவ்வொரு சின்னஞ்சிறுசுகளும் பாடுவதைக் கேட்டாலே புரிந்துவிடும்.. ஆனால் சுவிஸ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினர் இப்பாடலை எவ்வாறு பாடியுள்ளார்கள் என்பதை கேட்டால் தான் புரியும். சுவிஸை வசிப்பிடமாகக் கொண்ட ரம்யா சிவானந்தராஜா.. நல்ல திறமையான குரல்வளம் மிக்க இவர் இளவயதிலேயே மேடைகளில் ஏறி சினிமாப்பாடல், புரட்சிப்பாடல், கர்நாடக சங்கீத பாடல்கள் என ஏராளமான பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர். தற்போது மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கும் வை திஸ் கொலைவெறி பாடல் எல்லோர் மனதையும் கொள்ளையடித்த பாடல். அப்பாடலின் மெட்டினைத் திருடி, வரிகளை மாற்றி, ரம்யாவின் குரலில் பாட வைத்துள்ளனர் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு சுவிஸ் கிளையினர். வன்னிப்பீப்பிள் ஆஸ்க்ட் ஹெல்ப்.....வேர்ள்பீப்பிள் குவைட் குவைட்........அருமையான குரலில் அழகாக பாடியுள்ளார். ரம்யா நீங்களும் அப்பாடலை கேட்டு மகிழ..... இல்லை இல்லை உதவி செய்ய......
|
Geen opmerkingen:
Een reactie posten