[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 12:39.00 AM GMT ]
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் இலங்கை எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
நீண்ட காலமாக நிலவி வரும் இரு தரப்பு உறவுகளை பாதுகாக்கவும், தமிழகம் செல்லும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்க எடுக்கப்பட வேண்டுமென இலங்கை இந்தியாவை கோரவுள்ளது.
இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் புதுடெல்லிக்கு விஜயம் செய்து இந்தியப் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தல், தனி ஈழ இராச்சியம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைள தமிழக அரசியல்வாதிகள் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் ஜனநாயக விரோத அழுத்தங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும்!- தேசப்பற்றுடைய அமைப்புக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 12:50.48 AM GMT ]
தேசப்பற்றுடைய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளன.
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தினால் அதன் பின்னர் தெற்கில் நடைபெறும் அனைத்து தேர்தல்களின் போது அரசாங்கத்தை எதிர்க்க தேசப்பற்றுடைய அமைப்புக்கள் தீர்மானித்துள்ளனர்.
இதனை விடவும் கடினமான தருணங்களில் அரசாங்கம் சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிற்கோ அல்லது இந்தியாவிற்கோ அஞ்சி வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்துவது பொருத்தமற்றது.
இதனால் அரசாங்கமும் நாடு பாரியளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten