தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 maart 2013

இராமேஸ்வரம் மீனவர்களின் 16 நாள் தொடர்ந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு!


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் 16வது நாளாகவும் தொடர்ச்சியாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடந்த 13-ம் தேதி 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.
இதனைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யக் கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை ஆட்சியர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 16 நாட்கள் நீடித்து வந்த இந்தப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்தது.
கச்சதீவு பிரச்சினை: இந்தியா- இலங்கை வெளியுறவு துறை அதிகாரிகள் பேசுவார்கள்- நாராயணசாமி
கச்சதீவில் தமிழக மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல் பற்றி இந்தியா- இலங்கை வெளியுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.
மத்திய மந்திரி நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும். இந்த கருத்தை முதல்மைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த மாநாடு நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதற்கு நீண்டகால இடைவெளி உள்ளது. தகுந்த நேரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும். இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா தீர்மானத்தில் ஓட்டு போட்டதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
கச்சதீவு ஒப்பந்தம் தெளிவாக உள்ளது. இந்திய மீனவர்கள் தாராளமாக மீன்பிடிக்கலாம். படகு மற்றும் வலைகளை பராமரித்து பணிகளை கச்சதீவில் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தவித தடையும் கிடையாது என உள்ளது.
ஆனால் சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் துன்புறுத்தி வருகிறது. இதுபற்றி 2 நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகள் பேசுவார்கள் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten