தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 maart 2013

இன, மத குரோதங்களை தவிர்க்க அரசாங்கம் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்: பா.உ மங்கள சமரவீர


நாட்டில் இன, மத குரோதங்களை தடுப்பதற்கு அரசாங்கம் சட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பாசிசவாதத்தை பின்பற்றினர். சிங்கள, முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். மாற்று கருத்துக்களை வெளியிடும் இந்து மதகுருமாரும் தாக்கப்பட்டனர்.
அண்மையில் அரந்தலாவ பகுதியில் பௌத்த பிக்குகள் கொலை தொடர்பில் மூன்றரை கோடி ரூபா செலவில் அருங்காட்சியகமொன்று அமைக்கப்பட்டது.
இதில் கொலையுண்ட பௌத்த பிக்குகளின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும், கொலைகளை செய்த புலிகளின் சிலைகள் இதில் வடிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த பாசிச கொலைகளை செய்யத் திட்டமிட்ட கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் ஜனாதிபதியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் சிலைகள் அமைக்கப்படவில்லை.
புலிகள் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள போதிலும், பிரபாகரனின் பாசிசவாத கொள்கைகளை இந்த அரசாங்கம் பின்பற்றி வருகின்றது.
பிரபாகரனின் குரோத அரசியலலை இன்று மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளது. கடும்போக்குடைய மத அமைப்புக்களுக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருகின்றது.
2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மத வழிபாட்டுத் தளங்கள் மீது 65 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இவ்வாறு தாக்குதல் நடாத்துவோர் பற்றி எங்களிடம் தகவல்கள் காணப்படுகின்றன. தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten