இந்த தகவலை இந்திய செய்தி தரப்புக்கள் வெளியிட்டுள்ளன. ஐபிஎல் 6 வது கட்டம் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ளன.
இந்தநிலையில் இலங்கை பிரச்சினை தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை கருத்திற்கொண்டு சென்னையில் போட்டிகளை நடத்தமுடியாது என்று ஐபிஎல் குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியில் இலங்கை வீரர்களும் இடம்பெறும் நிலையில் அவர்களால் சென்னையில் விளையாட முடியாமல் போகலாம் என்று ஐபிஎல் குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கானா பிரச்சினை காரணமாக ஹைதராபாத்திலும் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம் என்று இந்திய கிரிக்கெட் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். சிக்கல் தொடர்கிறது....
ஆறாவது ஐ.பி.எல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை விடயம் தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை விடயத்தை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் போட்டிகளை குழப்பவிருப்பதாக தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு போட்டியின் நிதி வழங்குனவர்கள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களை நீக்கும் எண்ணம் அணிகளின் உரிமையாளர்களுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten