[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 10:21.16 AM GMT ]
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:-
இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற, ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க் குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மேலும், மாணவமாணவியர் 210 இடங்களில் ஆர்ப்பாட்டம், 110 இடங்களில் ஊர்வலம், 68 இடங்களில் சாலை மறியல், 31 இடங்களில் ரயில் மறியல், 24 இடங்களில் உருவபொம்மையை எரித்தல் ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்பதை மனதில் வைத்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZjo7.html
தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம்! ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 10:27.57 AM GMT ]
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும்.
துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், 1976 மே 14 ல், வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில், ஈழத்தமிழர்கள் அனைவரும் கூடி ஒருங்கிணைந்து, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகச் செய்த பிரகடனத்தின் வழியிலும், பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த போர் நடத்தி, உயிர்த்தியாகங்கள் செய்து, கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தை, சிங்கள அரசு சிதைக்க முனைந்த போதும், அதை நிர்மாணிக்கின்ற விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற தீர்மானத்துக்கு வரலாறு பொன் மகுடம் சூட்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத்தான் போகிறது. இதே தீர்மானத்தை, இந்திய நாடாளுமன்றமும் நிறைவேற்றும் நாள் வரும். அனைத்து உலகம், அதைச் செயல்படுத்தும் நாளும் வந்தே தீரும். விடியலின் வெளிச்சத்தைத் தரும் தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றிய, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், தமிழகச் சட்டப்பேரவைக்கும், தரணி எங்கும் வாழும் தமிழர்கள் சார்பிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZjpy.html
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு!- தமிழக சட்டசபையில் தீர்மானம்
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 08:15.42 AM GMT ]
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,
இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சம நீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZjo1.html
இலங்கை விவகாரம்! தமிழக மக்கள் மனசு என்ற தலைப்பில் அதிரடி முடிவுகள்!
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 08:21.12 AM GMT ] [ விகடன் ]
இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் கணிப்பு பார்க்கக் களம் இறங்கியது ஜூனியர் விகடன்.
மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே குழு.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணையத்தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது.
அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.
சரியான நேரத்தில் சர்வே எடுக்க முடிவு செய்திருக்கீங்க என்று ஆர்வத்துடன் கேள்விகளை எதிர்கொண்டனர் மக்கள்.
ஈழ விவகாரத்தை மாணவர்கள் போராட்டமாக முன்னெடுத்ததற்கு ஏகோபித்த வரவேற்பு இவர்களிடம் உள்ளது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட புகைப்படத்தைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மத்திய அரசு மீதும் தி.மு.க- மீதும் மக்கள் மத்தியில் இருந்த கோபம், நமது சர்வே டீமிடம் வார்த்தைகளாக வந்து விழுந்தன.
இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு?’ என்கிற கேள்விக்கு பொட்டில் அடித்தாற் போல 'தனி ஈழம்தான்’ என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லி இருக்கின்றனர்.
இந்தியாவின் துணையோடுதான் இலங்கையில் இறுதிப் போர் நடந்தது என்று 71 சதவிகிதம் கருத்து தெரிவித்தனர்.
ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் 88 சதவிகிதம் பேர்.
ஈழ விவகாரத்தில் கருணாநிதி எடுக்கும் முடிவுகள் தேர்தல் அரசியல் சார்ந்தது என 64 சதவிகிதம் பேர் டிக் அடித்துள்ளனர்.
அதே சமயம் ஜெயலலிதாவுக்கும் ஈழ விவகாரத்தில் பெரிதாக ஆதரவு இல்லை.
இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கும் கட்சி என்கிற கேள்விக்கு ம.தி.மு.க-தான் முதல் இடத்தில் இருக்கிறது.
ஆச்சர்ய சர்வே முடிவுகள் உங்களின் பார்வைக்கு....
http://www.tamilwin.net/show-RUmryDRbNZjo2.html
Geen opmerkingen:
Een reactie posten