இலங்கையில் வாழும் தமிழர்களை பாதுகாக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) செயல் தலைவர் பிரவீண் தொகாடியா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இந்திய கடற்படை மூலம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதையடுத்து காங்கிரஸின் எதிர்காலம் குறித்து காலம்தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கோவை மாவட்டம், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக, திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியினரை கைது செய்யக் கோரி தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை சட்டக் கல்லூரி மாணவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
இதில் கலந்துகொண்ட தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் கருத்துதெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து, அமைதியான முறையில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கும் வகையில், திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்.
தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
இந்தியாவில் நடக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்றார். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten