தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

ஜெனீவாவில் நடந்தேறிய சூரசம்ஹாரம்!


உலகத் தமிழர்களிடையே இந்தப் பெயர் ஏற்படுத்தாத அதிர்வலைகளே இல்லை எனலாம். பாலச்சந்திரனின் மரணம் தமிழ் மக்களிடையே எந்த அளவிற்கு விசும்பலை ஏற்படுத்தியுள்ளதோ, அந்தளவிற்கு சிதறிக் கிடந்த அவர்களை ஒன்றிணைத்துள்ளது.
அதற்கு ஜெனீவா நகரில் நடந்த ""சூரசம்ஹாரமே'' சாட்சி.

ஜெனீவாவில் ராஜபக்‌ஷவை சூரனாகவும், பிரபாகரனை முருகனாகவும் கொண்டு புலம் பெயர் தமிழர்கள் நடத்திய நிகழ்வில், பிரிந்து கிடந்த புலிகள் தங்களுக்குள்ளே அறிமுகம் செய்து கொள்ள, புதிய திட்டம் அங்கு பிறந்தது. முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள, இது நடந்திருக்குமோ? இதெல்லாம் நடந்திருக்குமோ? என்ற விடை தெரியாத பல கேள்விகளுக்கு, அங்கு விடை தெரிந்துள்ளது.

இன்றும் இவர் இருக்கிறார், அவர் இருக்கிறார் என ஆச்சர்யமூட்டும் பல பதில்கள் அங்கு கிடைத்துள்ளன. மீண்டும் எங்கு நாம் கூடலாம்? இனி நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இயங்க வேண்டும்? என்பது மாதிரியான சில முக்கிய முடிவுகளும் புலிகள் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் தெரிவிக்கையில்,

தலைவரிடமிருந்து கட்டளை வரும். அதன் பின் வாருங்கள் என்று வந்த ஆணைப்படி முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய நாங்கள் இப்பொழுது இங்கு இருக்கிறோம். இறுதிகட்டத்தில் நடந்தது என்ன? சிங்கள அரசும் சிலரைத்தான் கொன்றதாகக் காண்பித்தது.
என்னுடன் களமாடிய தம்பிகளைக் காணவில்லை. அப்பொழுதுதான் ஒன்று விளங்கியது. தலைவர் எங்களை அனுப்பியது போல் மற்றவர்களை அனுப்பியிருக்கலாமே? அது இங்கு கூடி நிற்கும் என் தம்பிகளைப் பார்த்து புரிந்தது; என்னைப் போல் அவர்களும் வந்துள்ளதாக. தலைவர் தீர்க்கதரிசி. 'உலக மக்களின் எழுச்சி தமிழீழத்தைப் பெற துணை நிற்கும்! என்று அன்றே கூறினார். அது இன்று நடக்கிறது. எனத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten