திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யுத்தம் நிறைவடைந்த பின்னர் சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளது. இதனாலேயே தற்போது பல்வேறு அழுத்தங்களையும் தீர்மானங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
எனினும் தற்போதும் குறித்த தீர்மானங்களை அமுலாக்குவதைத் தவிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
எனவே இதனை தடுத்து நிறுத்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கட்சி பேதம் இன்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten