நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த சமயம் ஆலயத்திற்குச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அந்தோனியாhர் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பெட்டிடை உடைத்ததோடு சில பொருட்கள் இழுத்து கீழே விசப்பட்டு கிடந்தது.
ஆலயப் பகுதியினுள் மனித மலம் வீசப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆலயத்திற்கு மாலை வந்த மக்கள் குறித்த சம்பவத்தை கண்ட நிலையில் தமக்கு தெரியப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் உதவி பங்குத்தந்தை அன்ரன் தவராஜ் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சில்லு விற்பனை நிலையம் ஒன்றின் களஞ்சிய சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகன சில்லுகள் மற்றும் இதர பொருட்களும் தீக்கிரையானது.
மின் ஒழுக்கின் காரணமாகவே குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாக மன்னார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார், கடற்படை, இராணுவம் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து நீண்ட நேரத்தின் பின் ஏனைய கடைகளுக்கு தீ
பராவாத நிலையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
பராவாத நிலையில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் உடன் மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten