தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 maart 2013

பொது எதிரணியுடன் இணைந்து செயற்பட முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு


நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? - ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 11:49.23 AM GMT ]
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பியகம தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பாடல் படையணி பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே அவர், இந்த விடயத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.
அரசாங்கம் பொதுமக்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முனைவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜெனீவா மாநாட்டிற்கு முன்னர் செயற்பாடுகளை மேற்கொண்டு நாட்டிற்கான சிறந்த பெயரை பெற்றுக் கொள்வோம் என்று வலியுறுத்தியிருந்தாக அவர் குறிப்பிட்டார்.
வானூர்தி தளமொன்றை திறப்பதன் மூலம் நாட்டிற்கு நற்பெயர் கிடைத்து விடாது.
தம்மால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கத்தால் ஏன் அமுல்படுத்த முடியாது என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

http://www.tamilwin.net/show-RUmryDRaNZkuz.html

பொது எதிரணியுடன் இணைந்து செயற்பட முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 11:57.16 AM GMT ]
இலங்கை அரசு மீது சர்வதேச அழுத்தங்கள் வலுத்துவரும் நிலையில் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருப்பதானது, அந்த அழுத்தங்களிலிருந்து அரசைப் பாதுகாக்கும் செயல். அதுமட்டுமன்றி இது தமிழ் மக்களை ஏமாற்றும் செயலும்கூட என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டினூடாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.
இவர் எடுக்கும் இந்த முயற்சி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்ற உண்மையான மனநிறைவுடன் எடுக்கும் முயற்சியா அல்லது அரசைக் காக்கும் முயற்சியா என்ற கேள்வி எழுகின்றது.
ஏனெனில், கடந்த ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க அரசு இழுத்தடிப்புக்களைச் செய்துவந்த போதும் அவர் மௌனமாகவே இருந்தார்.
பொது எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளில் பங்குகொள்ளும் ஒரு கட்சியாகக் கூட்டமைப்பு இருக்கின்ற போதிலும், அந்தப் பொது எதிர்க்கட்சிகளின் உடன்படிக்கையில் நாம் கைச்சாத்திடவில்லை.
ஏனெனில், முக்கிய தேவைக்காக மட்டுமே நாம் பொது எதிரணியுடன் இணைந்து செயற்படுவோம். அதன் எல்லா செயற்பாடுகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வகட்சி மாநாட்டு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசுகிறார். இது தமிழ்மக்களை ஏமாற்றும் செயல். இதனால் நாம் இதில் பங்கேற்க முடியாது.
பொது எதிர்க்கட்சிகளின் கொள்கைகளை நாம் ஏற்கவில்லை. அவற்றை ஏற்றிருந்தால் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருப்போம். அவற்றை ஏற்காததால்தான் நாம் அதில் கைச்சாத்திடவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, பொது எதிர்க்கட்சியின் சில நடவடிக்கைகளை நாம் ஏற்றுக்கொண்டாலும் அவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார் சுரேஷ்.

http://www.tamilwin.net/show-RUmryDRaNZku0.html

விடியல் கண்ணுக்குத் தெரிகிறது! வீதிக்கு வந்த ஈழத் தமிழ் மக்கள்!
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 01:33.39 AM GMT ] [ விகடன் ]
'எங்கள் கண்களைக் கட்டிவைத்து சுடுகிறார்களே, உலக நாடுகளே உங்கள் கண்கள் திறந்துதானே இருக்கிறது?� என்ற விளம்பரப் பதாகைகளுடன் ஒன்றுதிரண்டனர் தமிழகம் முழுதும் உள்ள முகாம்களில் இருக்கும் இந்திய வாழ் ஈழத் தமிழ் மக்கள். 
கடந்த 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈழத் தமிழ் மக்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பழ.நெடு​மாறன், வைகோ, நடிகர் ராதாரவி, நடிகர் மன்சூர் அலிகான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ம.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடிகர் ராதாரவி பேசுகையில்,
'தந்தை பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் இருந்திருந்தால், ஈழத் தமிழர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. தமிழர்கள் இப்போதுதான் விழித்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழர்கள் எப்போதும் உறங்கவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழீழ விடுதலை அடையாமல் உறங்க மாட்டோம். தனித் தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்'' என்றார்.
வைகோ பேசும்போது,
தமிழீழத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சிங்கள அரசுக்கு இந்திய அரசு உதவுவதை நிறுத்தாவிட்டால், இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளிவைக்கும். அரசியல் கட்சிகளைக் கடந்து மாணவர்கள் பட்டாளம் இந்திய அரசைத் தலைவணங்கவைப்பார்கள். எமக்குப் பின்னால் வரும் இளைய தலைமுறை என்னைப்போல் பேசிக்கொண்டு இருக்காது. தமிழகம் எடுக்கும் முடிவுதான் இந்திய அரசு எடுக்கும் முடிவு என்ற சூழலை மாணவர்கள் உருவாக்குவார்கள். விடியல் கண்ணுக்குத் தெரிகிறது. உங்கள் காலத்தில் ஈழத்தை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் நேசிக்கும் மண்ணை வருங்கால மாணவர்கள் அமைத்துத் தருவார்கள்'' என்றார்.
பழ.நெடுமாறன் பேசும்போது,
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையைத் தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையைத் தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சுதந்திரத் தமிழீழம் மலர்வதை உங்கள் கண்களால் கண்டு உங்கள் தாயகத்துக்குத் திரும்பிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்றார்.

ஈழத்தைச் சேர்ந்த இருதய ராணி,
நான் முல்லைத் தீவைச் சேர்ந்த பெண். எனது குடும்பத்தினர் அனைவரையும் போரில் இழந்துவிட்டேன். நானும் எனது தம்பியும் வேலூர் அகதிகள் முகாமில் உள்ளோம். மாணவர்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. நாங்கள் எங்கள் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு மாணவர்கள் போராட்டத்தால் செயல்படக்கூடும். யாரும் தீக்குளித்துப் போராட வேண்டாம்'' என்றார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு,
கடந்த 12-ம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார். இப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேசியபோது, ''மாணவர்கள் சாதி, மதம் அரசியல் கடந்து போராடுவது உளவியல்ரீதியாக மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது. ஒரு நாட்டின் நான்காவது தூண் ஊடகம் என்பார்கள். ஆனால் ஈழ சமூகத்தின் இரண்டாவது தூணும் ஊடகமே. மாணவர்கள் யாரும் தீக்குளித்துப் போராட வேண்டாம் என்று ஊடகங்கள் வலியுறுத்த வேண்டும்'' என்றார்.

http://www.tamilwin.net/show-RUmryDRbNZkwz.html

Geen opmerkingen:

Een reactie posten