பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பாசிச ஜெயாவின் போலீசைக் கண்டித்தும், மார்ச் 22, மாலை 3.30 மணிக்கு மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது.
போராட்டம் அறிவித்த உடனேயே போலீசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு அரைமணிநேரம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிப்பதாக கூறினர். இவர்களிடம் மாணவர் முன்னணி அனுமதி கேட்கவில்லை என்பது வேறு விடயம்.
மாணவர்கள் சாஸ்திரிபவனை அடைவதற்கு முன்பே 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அருகிலிருந்த பிராசார் பாரதி அலுவலகத்திலும், சிதம்பரம் வீட்டிலும் நிறைய போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
தினசரி போராட்டம் நடத்தி வந்ததனால் மற்ற மாணவர்களை போதிய அளவு திரட்ட முடியவில்லை என்பதால் மாணவர் முன்னணியின் முன்னணியாளர்கள் 50 பேர் மட்டும் இங்கு கலந்து கொண்டனர். அவர்களுக்குத்தான் 400 போலிசார் பாதுகாப்பு.
மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வழிகாட்டி நடத்திய இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி மறியல் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த உடன் மாணவர்கள் கைதாக வந்த போது போலீசு கைது செய்யாமல் கலைந்து செல்லும்படி மட்டும் கேட்டுக் கொண்டது.
Geen opmerkingen:
Een reactie posten