தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

UN தீர்மானம் குறித்து இந்தியாவுடன் ரொபர்ட் ஓ பிளக் மந்திராலோசனை


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்தியாவுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.
தீர்மானம் தொடர்பான யோசனை சமர்ப்பிக்கப்பட்டது முதல் இந்தியாவின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சில திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு திருப்தி அளிக்கும் வகையில் அமையப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதே பொருத்தமானது எனவும், இலங்கை மீது இந்தியா கூடுதல் தாக்கத்தை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் மென்மையாக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் சமனிலையானதும் நியாயமானதுமான முறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அர்த்தமுள்ள வகையில் நல்லிணக்க மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten