இந்த சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் அண்மையில் இரண்டு பௌத்த துறவிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அசோக் கே காந்தா,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்தும் சுமுக நிலை உருவாக வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கையின் பௌத்த மக்கள் தமிழகத்தின் ஊடாக இந்தியாவுக்கு சென்று வழிபாடுகளை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படுத்தப்படும் என்றும் காந்தா தெரிவித்தார்.
இந்தநிலையில் தமிழகத்தில் பௌத்;த துறவிகள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவர் இந்தியாவின் சார்பில் தமது வருத்தத்தை வெளியிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten