தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரிப்பு !!


தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிராகரிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் நிராகரித்துள்ளார்.
சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்துள்ள செவ்வியில்,
“சிறிலங்காவின் தமிழர்களுக்கு தனி ஈழம் கோரி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், சிறிலங்காவை நட்புநாடாக நடத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்துகின்றது.
ஆனால் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் கடுமையான உணர்வுகள் இருப்பதை நான் கவனத்தில் கொண்டுள்ளேன்.
ஏனைய கட்சிகளிடம் மட்டுமன்றி எமது கட்சியில் கூட இத்தகைய கடுமையான உணர்வு உள்ளது.
எல்லோரிடத்திலும் இல்லாவிட்டாலும், நிறையப் பேரிடம் உள்ளது.
ஆனால் உலகின் பலபேரின் நிலைப்பாட்டுடன் இந்த உணர்வுகள் முற்றிலும் ஒத்துப் போகவில்லை.
அதேவேளை, நாம் பேச்சுக்களை நம்புகிறோம். நாம் சிறிலங்காவுடன் நாம் பேச்சுக்களை நடத்த முடியும் என்று நம்புகிறோம்.
அதற்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
சிறிலங்காவை நட்பு நாடு இல்லை என்று முடிவெடுப்பது குறித்து உடனடியாக ஆலோசிக்கும் திட்டம் இல்லை.
பொருளாதாரத்தடை விதிக்கும் எண்ணமும் இல்லை. தனிஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரும் திட்டமும் இல்லை.
இந்த விவகாரத்தை ஒரு சட்டமன்றம் தான் நிறைவேற்றியுள்ளது.
ஏனைய மாநிலங்கள் என்ன நிலையில் உள்ளன? மேலும் பல சட்டமன்றங்கள் உள்ளன.
இதற்கு இந்தியாவின் ஏனைய பகுதிகளில் ஆதரவு இல்லை.
இதற்கு இந்தியா முழுவதிலும் ஆதரவு இருந்தால், அது இன்னொரு விவகாரமாக இருக்கும்.
ஆனால் ஒரு மாநிலத்தின் ஆதரவை எம்மால் அதன் உணர்வாகவே கருத்தில் எடுக்க முடியும்.
அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை.” என்று தெரிவித்தார்.


http://asrilanka.com/2013/03/29/16308

Geen opmerkingen:

Een reactie posten