தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

மாணவர்களுக்கு இலங்கை தமிழர் ‘ஆயுத குழு’ அழிக்கப்பட்டது தெரியுமா ?



“இலங்கை விவகாரம் பற்றி புரியாமல், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்” என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் எம்.பி., “செல்வநாயகம் காலத்தில் தொடங்கிய ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுத குழுக்கள் 3-வது ஈழ போரில் அழிக்கப்பட்டன” என்று தெரிவித்தார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்து முடிந்தது, 4-வது ஈழப் போர். அப்போது அதில் யுத்தம் புரிந்தது யார் என்று விளக்கமாக சொல்லவில்லை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் எம்.பி.

திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியபின் பேசிய அவர், “இலங்கை பிரச்சினையில் மாணவர்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த பிரச்சினையில் செல்வநாயகம் காலம் முதல் ஆயுதம் தாங்கி போராடிய 3-வது போரில் ஆயுத குழுக்கள் அழிக்கப்பட்டன. கடைசி கட்ட போரில் இலங்கை ராணுவத்தாலேயே ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்ட கொடுமை நடந்தது. நமது மத்திய அரசு, இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்த வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தந்துள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக மத்திய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது புரியாமல் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஐக்கிய நாட்டு சபையின் விதிமுறைகள் தெரியாமல் இலங்கையில் தனி நாடு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பொது வாக்கெடுப்பு, தனிநாடு என்று போராட்டங்கள் நடத்தி வருவது சரியல்ல.
காங்கிரஸ் கட்சியின் பேனர்களையும் கிழிப்பது தவறு. மாணவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு செய்து வரும் பணிகளையும் உண்மை நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வருகிற 30-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளது” என்றார்.

அண்ணே… திருச்சியில் காங்கிரஸ்காரர்கள் நடத்திய ‘வீரவிளையாட்டு’, தமிழகம் எங்கும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் எங்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களா ?

எதற்கும் உங்க கட்-அவுட் வைக்க வேண்டாம் என்று கட்சியில் சொல்லி வையுங்க! பயபுள்ளைங்க அடிச்சுப் புடுவாங்க அய்யா !


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4771

Geen opmerkingen:

Een reactie posten