தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

சிங்களவரையும் விட்டுவைக்காத இலங்கை பொலிஸார்! தாக்குதலில் சந்தேக நபர் மரணம்!!


பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் மீது நடத்திய தாக்குதலில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கிலிலுள்ள பொல்பித்திகம பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபானம் வைத்திருந்ததாகத் தெரிவிக்கும் ஆவணமொன்றின் கைச்சாத்திடாத காரணத்தினால் ஆத்திரமடைந்த இலங்கை பொலிஸார், சோமரட்ன எனப்படும் பண்டையாவை தாக்கியுள்ளனர். இந்தத்தாக்குதல் சம்பவத்தில் பண்டையா உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்களும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சக சந்தேக நபரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மதுபானம் வைத்திருக்காத காரணத்தினால் என்னால் ஆவணத்தில் கையொப்பமிட முடியாது என பண்டையா தெரிவித்துள்ளார்.

'உன்னிடம் எவ்வாறு ஒப்பம் எடுக்க வேண்டுமெனத் தெரியும்' எனக் கூறி பொலிஸ் உத்தியோகத்தர் கடுமையாக தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாக்குதல் காரணமாகவே பண்டையா உயிரிழந்தார் எனவும், இது தொடர்பில் எந்த இடத்திலும் சாட்சியமளிக்கத் தயார் எனவும் பண்டையாவுடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதி தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/23967/57//d,article_full.aspx

Geen opmerkingen:

Een reactie posten