மாபெரும் எழுச்சியாக தமிழ் நாட்டு மாணவர்களின் ஓயாத போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக, அம்மாணவச் செல்வங்களின் எழுச்சியை ஆதரித்து சுவிஸ் துர்க்கா மாநில கலை கலாசார மன்றத்தினால் ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.
தாய் தமிழ் நாட்டில் தமிழ் மானம் காக்க இன்று எழுச்சி கொண்ட மாணவர்களே!
“உங்களால் தமிழ் இனம் மீண்டும் இன்று நிமிர்ந்து நிக்கின்றது. வெருண்டு நிற்கின்ற நாங்கள் கூட வினாவுடன் விழிக்கின்றோம்! இருந்தும் துடிக்கின்றோம் ஆத்திரமும் வேண்டாம் எரிந்து அற்பணிப்பும் வேண்டாம்.
அறப்போர் செய்வோம், ஆண்ட பூமியை ஆழ்வோம். உரிமையோடு விடுதலை கேள். நன்றியோடு நாங்கள் உள்ளோம் என்றும் உன் பின்னாலே” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten