தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து மன்மோகன்சிங்கே முடிவெடுப்பார்: நாராயணசாமி !


இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கே முடிவெடுப்பார் என இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. அத்துடன், இந்தியா அம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இக்கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளியுறவுத் துறையுடன் ஆலோசித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
கொமன்வெல்த் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதால், முடிவெடுப்பதற்கு கால அவகாசம் உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

http://news.lankasri.com/show-RUmryDQUNZis1.html

Geen opmerkingen:

Een reactie posten