தமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் மீது தொடரும் சிறீலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கையால் உணர்வுபூர்வமாக திரண்டெழுந்துள்ள தமிழக உறவுகளின் போராட்டம் இந்தியாவின் ஆளும் அரசாங்கத்தை ஆட்டிப் படைப்பது அனைவரும் அறிந்ததே
போராட்டம் தற்போது மென்மேலும் வீச்சடைந்துள்ளதால் அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசு, தமிழ்நாட்டில் உள்ள தமது தூதரகத்தை மூடிவிட்டு கேரளாவில் புதிய தூதரகத்தை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் போராட்டத்தால் அச்சமடைந்து தப்பியோட முயற்சிக்கும் சிறீலங்காவின் நடவடிக்கை தமிழக உறவுகளின் போராட்டத்துக்கு கிடைத்த ஒரு வெற்றியென பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக உறவுகளின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக புலம்பெயர் தமிழர்களும் தமது போராட்டங்களை முனைப்புபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten