தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

அமெரிக்காவின் பிரேரணை காகித புலியென சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விசனம்


அமெரிக்காவின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, ஒரு காகித புலி போன்றது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். யுரோஏசியா என்ற விமர்சன இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  இந்த பிரேரணை இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையிலும், தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் வகையிலும் முன்மொழியப்பட்டிருந்தாலும், இறுதி நேரத்தில் அது நீர்த்துப் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பிரேரணை காகிதத்தில் மாத்திரம் அச்சுறுத்துவதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீண்டகால கனவாக மாறி இருப்பதாகவும் யுரோஏசியா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளின் நாடகம் மாத்திரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்ஒவ்வொரு வருடமும் அரங்கேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten