இப்பிரதேசத்தில் உணவு விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளில் ஈடுபட்டபோதே இந்த எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டல் நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இவ் எச்சங்கள் கொண்ட புதைகுழியைக் கண்டு வாகரைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். குறிப்பாக இங்கே எத்தனை மனித எலும்புக்கூடுகள் காணப்படுகிறது என்பது தொடர்பாக இதுவரை அறியப்படவில்லை. சமீபத்தில் மாத்தறையில் பல நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. இவை சிங்கள கிளர்ச்சியாளர்களான ஜே.பி.யினரது உடல்கள் என்று பின்னர் அறியப்பட்டது.
ஆனால் மட்டக்களப்பில் உள்ள இவ் எலும்புக் கூடுகள் தமிழர்கள் அல்லது முஸ்லீம்களுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4747
Geen opmerkingen:
Een reactie posten