மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவுக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு இதுவே என்று குறிப்பிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையைப் பாதுகாப்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த அவர், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமித்த கருத்து இன்மையால், வலுவானதாக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஒருமித்த கருத்து இருந்திருந்தால் இந்தியாவின் திருத்தங்களை தீர்மானத்தில் உள்ளடக்கியிருக்கக் கூடும்.
அவர்களுக்கு தீர்மானத்துக்கு ஆதரவாக பெருமளவு உறுப்பினர்களின் தேவைப்பட்டனர்.
நாம் அந்த ஒருமித்த நிலைப்பாட்டை உடைக்க விரும்பவில்லை என திரு. குர்ஷித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பலைகள், மத்திய அரசில் மாற்றங்களை ஏற்படுத்தி வருதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பெரும் புரட்சி 2009ன் ஆரம்ப காலப்பகுதியில் ஏற்பட்டிருந்தால், பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என பலர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten