பிரஜாவுரிமை விண்ணப்பம், தற்காலிக மாணவர் விசா மற்றும் உத்தியோகத்தர் விருந்தினர் விசா சம்பந்தப்பட்ட ஆவணங்களைச்செய்முறைப் படுத்துவதற்குண்டான செலவினங்களை உள்ளடக்கும் நோக்கமே அரசாங்கத்தின் எண்ணமெனக்க கூறப்படுகின்றது.
Citizenship and Immigration கனடாவின் கடந்த வருடம் செப்ரம்பர் மாத புள்ளிவிபரப்படி 319,519 பரிசீலனைக்கு இருந்ததாயும் ஆனால் 160 000 விண்ணப்பங்களின் பரிசீலனைக்குப்போதுமான நிதியுதவியே கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
CIC மந்திரி யேசன் கெனியின் பேச்சாளர் அலெக்சிஸ் பவ்லிஸின் கூற்றுப்படி குடியுரிமை விண்ணப்பங்களின் நடைமுறைக்கான செலவினங்கள் அதிகரித்தபோதிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
தற்போது அறவிடப்படும் $200 செலவினங்களுக்கான தொகையின் 20 வீதம் உள்ளடக்கக்கூடியதாக இருப்பதால் புதிய கட்டணம் 400 டொலர்களாக உயரலாமெனக்கருதப்படுகின்றது.
http://www.canadamirror.com/canada/7973.html
Geen opmerkingen:
Een reactie posten